×

நாகப்பட்டினம் கடலில் 114 விநாயகர் சிலைகள் கரைப்பு அனைவரும் மரக்கன்றுகள் நட்டுவைத்து: பசுமையை உருவாக்க ஒருங்கிணைந்து செயல்படலாம்

மயிலாடுதுறை, செப்.25: மயிலாடுதுறை அடுத்த நீடூர்-கடுவங்குடி தீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்கம் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தையொட்டி 800 மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் தலைமையில் பசுமை தமிழ்நாடு இயக்க உறுதிமொழியினை. கல்லூரி மாணவிகள், வனத்துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசானது பசுமை தமிழ்நாடு இயக்கம், காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் விவசாய நிலங்கள்,கல்வி-பொது நிறுவனங்களில் மரக்கன்று நடும் பணியினை ஊாக்குவித்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டில் பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், பொது இடங்களில் மரக்கன்றுகள் நடும் வகையில், இம்மாவட்டத்தின் தட்ப வெப்ப நிலைக்கும், மண்ணின் தரத்திற்கும் ஏற்றவாறு தேக்கு, மகாகனி, வேங்கை போன்ற மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

மரக்கன்றுகள் தேவைப்படும் பொதுமக்கள், விவசாயிகள், தொழில் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வனச்சரக அலுவலகம் அல்லது நாகப்பட்டினம் மாவட்டம் திருச்சம்பள்ளி வனச்சரக அலுவலகத்தை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். மரக்கன்றுகள் தேவைப்படுபவர்கள் மரக்கன்றுகள் வைப்பதில் பொது இடங்கள் மற்றும் அரசு நிலங்களாக இருந்தால் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவரின் விருப்ப மனுதிர்மான நகல் மற்றும் தொடர்புடைய துறையின் தடையில்லா சான்று, விஏஓ சான்று மற்றும் வரைபடமும், பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களாக இருந்தால் பள்ளி அல்லது கல்வி நிறுவனங்களின் தலைமை ஆசிரிய மற்றும் முதல்வரின் வேண்டுகோள் கடிதம், விவசாய நிலங்களாக இருந்தால் சிட்டா அடங்கல் நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்டவைகளுடன் மயிலாடுதுறை மாவட்டம் சீகாழி வனச்சரக அலுவலகம் அல்லது நாகப்பட்டினம் மாவட்டம் திருச்சம்பள்ளி வளச்சரசு அலுவலகத்தை தொடர்பு கொண்டு மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம். பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் மரக்கன்றுகளை வைத்து, பசுமையினை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படலாம் என தெரிவித்தார்.

முன்னதாக கல்லூரி மாணவிகளுக்கு மரகன்றுகளை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து கல்லூரி மாணவிகள் பங்கேற்ற பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் மற்றும் கல்லூரி இயக்குனர் முத்துக்குமார் கல்லூரி முதல்வர் சுப்புரத்தினம், வன விரிவாக்க அலுவலர் கிருபாகரன், வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரன், வனவர் ஆனந்தீஸ்வரன், வனத்துறை அலுவலர்கள், கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post நாகப்பட்டினம் கடலில் 114 விநாயகர் சிலைகள் கரைப்பு அனைவரும் மரக்கன்றுகள் நட்டுவைத்து: பசுமையை உருவாக்க ஒருங்கிணைந்து செயல்படலாம் appeared first on Dinakaran.

Tags : Ganesha ,Nagapattinam ,Mayiladuthurai ,Green Tamil Nadu ,Forest Department ,Needur-Kaduangudi Deen College of Arts and Science ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடிநீர்...